வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!

Updated: Tue, May 27 2025 13:22 IST
Image Source: Google

இங்கிலாந்து -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிவரும் மே 29ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது. இத்தொட்ருக்கான இரு அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள் அநிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் ஜோ ரூட் 99 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 225 போட்டிகளில் 207 இன்னிங்ஸ்களில் விளையாடி 6957 ரன்களைச் சேர்த்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. அதேசமயம் ஜோ ரூப் 177 ஒருநாள் போட்டிகளில் 166 இன்னிங்ஸ்களில் விளையாடி 47.96 என்ற சராசரியுடன் 6859 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இதன் காரணமாக இப்போட்டியில் அவர் இந்த சாதானையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூட் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 177 போட்டிகளில் 166 இன்னிங்ஸ்களில் 47.96 சராசரியுடன் 6957 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 99 ரன்கள் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது இந்த சாதனை முன்னாள் பேட்ஸ்மேன் இயோன் மோர்கனின் பெயரில் உள்ளது, அவர் 225 போட்டிகளில் 207 இன்னிங்ஸ்களில் 6859 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • ஈயன் மோர்கன் - 6957
  • ஜோ ரூட் - 6859
  • இயன் பெல் - 5416
  • ஜோஸ் பட்லர் - 5196
  • பால் காலிங்வுட் - 5092

இதுதவிர்த்து இத்தொடரில் ஜோ ரூட் மேலும் 141 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டும் வாய்ப்பை பெறுவார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பையும் ஜோ ரூட் பெற்றுள்ளார். மேலும் அவர் இரண்டு பவுண்டரிகளை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 550 பவுண்டரிகளை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெறவுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், லுக் வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::