இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!

Updated: Sun, Feb 09 2025 14:46 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 

கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் மார்க் வுட், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணியில் இருந்து ஒரு வீரர் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தல் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் காயத்தில் நிலை என்ன என்பது தெரியாததால் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை இங்கிலாந்து அணி தேர்வு செய்துள்ளது. அதன்படி அதிரடி வீரரான டாம் பான்டன் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2020ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமான டாம் பான்டன் 6 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 134 ரன்களையும், 14 டி20 போட்டிகளில் இரண்டு அரைசதங்களுடன் 327 ரன்களையும் எடுத்துள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரில் 11 இன்னிங்ஸில் விளையாடியுள்ள பான்டன் இரண்டு சதங்களுடன் 493 ரன்களைக் குவித்ததன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து ஒருநாள் அணி:பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை