இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு (2022) முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்ட பிறகு அந்த அணியின் பேட்டிங்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்யும் விதம் அதிரடியாக மாறியுள்ளது. முன்பு இருந்த இங்கிலாந்து அணியா இது? என்ற கேள்வி உருவாகும் அளவுக்கு அவர்களது பேட்டிங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Advertisement

அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்யும் விதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் பெரிய ஷாட்களை அதிரடியாக விளையாடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் நபராக அவர் மாறியுள்ளார்.  

Advertisement

இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதும் இதில் அடங்கும். அணியின் கேப்டனாக அணியை வழிநடத்துவதில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் 2022ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 2022ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் 870 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 36.25 ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 71.21 ஆகும். அவர் கடந்த ஆண்டு இரண்டு சதங்களை விளாசியுள்ளார். 

அதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த 103 ரன்கள் சிறப்பானதாகும். அதே போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அந்த தொடர் முழுவதையும் சேர்த்து அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும், அவர் 2022ஆம் ஆண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் வெறும் 26 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பென் ஸ்டோக்ஸ் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News