WI vs ENG: இங்கிலாந்து அணியிலிருந்து ஆண்டர்சன், பிராட் நீக்கம்!

Updated: Wed, Feb 09 2022 12:27 IST
Image Source: Google

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியானது கடந்த சில மாதங்களாகவே படுதோல்வியைச் சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் அந்த அணி இழந்தது. 

இதனால் அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் அதிரடியாக நீக்கப்பட்டு, தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மார்ச் மாதம் தொடங்கும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியின் கேப்டனாக ஜோ ரூட் நீடிக்கிறார். துணைக்கேப்டான பென் ஸ்டோக்ஸ் செயல்படவுள்ளார். மேலும் அணியின் மூத்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ஜாக் கிராலி, மேத்யூ பிஷ்ஷர், பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், சாகிப் மஹ்மூத், கிரேக் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை