இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு பிரையோனி ஸ்மித் - டாமி பியூமண்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அபராமாக விளையாடி வந்த பிரையோனி ஸ்மித் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் பிரையோனி ஸ்மித் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சரென் ஸ்மேல் 25 ரன்களுக்கும், பெய்ஜ் ஸ்காச்ஃபீல்ட் 2 ரன்களுக்கும், ஆடம்ஸ் 16 ரன்களுக்கும், அர்மிடேஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை அதிரடியாக விளையாடிய மேடி வில்லியர்ஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து மகளிர் அணி தரப்பில் ஃப்ரீயா சார்ஜென்ட் மற்றும் ஐமி மாகுவேர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஏமி ஹண்டர் ஒரு ரன்னிலும், கேப்டன் கேபி லூயிஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய லியா பால், ரேபெக்கா ஸ்டாகெல், சாரா ஃபோர்ப்ஸ், அர்லீன் கெல்லி என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம்பொறுப்புடன் விளையாடி வந்த ஓர்லா பிரெண்டர்காஸ்ட் தனது அரைசதத்தை பதிவுசெய்து அணிக்கு நம்பிக்கையளித்து வந்த நிலையில், 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ஏவா கன்னிங் 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் அயர்லாந்து மகளிர் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் சாரிஸ் பாவ்லி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்த பிரையோனி ஸ்மித் ஆட்டநாயகி விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News