இங்கிலாந்து vs அயர்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியில் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs அயர்லாந்து
- இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
- நேரம் - மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து உள்நாட்டில் வலுமிக்க அணியாக திகழ்வதால் அயர்லாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் அறிமுக வீரராக களம் இறங்குகிறார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஜானி பேர்ஸ்டோவ் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துளது.
மறுபக்கம் ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்தின் உள்ளூர் அணியுடன் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. அந்த அணியில் பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இவ்விரு அணிகள் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு மோதிய டெஸ்டில் இங்கிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தேச லேவன்
இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்: பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்(கே), ஹாரி புரூக், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், மேத்யூ பாட்ஸ், ஜோஷ் டங்கு, ஜாக் லீச்
அயர்லாந்து ப்ளேயிங் லெவன்: ஜேம்ஸ் மெக்கல்லம், பீட்டர் மூர், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ஹாரி டெக்டர், பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், ஃபியோன் ஹேண்ட், கிரஹாம் ஹியூம், கிரேக் யங், தாமஸ் மேஸ்.