England vs West Indies Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs WI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - ஜூன் 20, காலை 6 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs WI Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் இங்கு பேட்டர்கள் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகிவை கிடைக்கும் என்பதால், புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு தங்கள் திறனை வெளிப்படுத்தலாம்.

ENG vs WI T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • இங்கிலாந்து - 12
  • வெஸ்ட் இண்டீஸ் - 19

ENG vs WI: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

England vs West Indies Probable Playing XI

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி.

Advertisement

வெஸ்ட் இண்டிஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அகில் ஹுசைன், அல்சாரி ஜோசப், குடாகேஷ் மோதி, ஓபேட் மெக்காய்.

ENG vs WI T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன், பில் சால்ட், ஜான்சன் சார்லஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஹாரி புரூக், ரோவ்மன் பவல்
  • ஆல்ரவுண்டர் - ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், ஓபேத் மெக்காய்.

ENG vs WI Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match ENG vs WI, ENG vs WI Dream11 Team, Fantasy  Cricket Tips, ENG vs WI Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs  West Indies

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News