இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - சோஃபி டிவைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை நியூசிலாந்து மகளிர் அணி சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சொஃபி டிவை 35 ரன்களையும், சூஸி பேட்ஸ் 34 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இதையடுத்து வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணிக்கு டேனியல் வையட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் 35 ரன்கள் எடுத்திய வையட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டாமி பியூமண்ட், நட்டாலி ஸ்கைவர் ஆகியோர் சொற்ப ரகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஹீத்தர் நைட் - எலன் ஜோன்ஸ் இணை சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் 19.5 ஓவர்களில் இங்கிலாந்து மகளிர் அணி இலக்கை எட்டி, நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ஹீத்தர் நைட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News