பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹல்!

Updated: Fri, Sep 27 2024 08:53 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியானது சமீபத்தில் வங்கதேச அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, வரலாற்றில் முதல் முறையாக வங்கதேச அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. 

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகள் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜோஷ் ஹல் தனது அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், அந்த போட்டியிலேயே காயத்தையும் சந்தித்தார். இதன் காரணமாக தற்சமயம் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியில் இருந்தும் ஜோஷ் ஹல் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தொடரில் இருந்து விலகிய ஜோஷ் ஹல்லிற்கு மாற்று வீரர் யாரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. ஏனெனில் ஏற்கெனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ மோட்ஸ், ஒல்லி ஸ்டோன், கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அஹ்மத், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃப்ராஸ் அகமது, ஷஹீன் ஷா அஃப்ரிடி. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை