ENGW vs INDW, 1st T20I: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!

Updated: Fri, Jul 09 2021 22:44 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நார்த்ஹாம்டனிலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். 

ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இங்கிலாந்து அணி- டேனியல் வியாட், டாமி பியூமண்ட், நடாலி ஸ்கைவர், ஹீதர் நைட் (கே), ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டங்க்லி, கேத்ரின் பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென், மேடி வில்லியர்ஸ், ஃப்ரேயா டேவிஸ்

இந்திய அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹார்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கே), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்நே ராணா, அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை