ENGW vs INDW, 3rd ODI: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!

Updated: Sat, Jul 03 2021 16:50 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 3) வர்செஸ்டரில் நடைபெறவுள்ளது. 

மழை காரணமாக இப்போட்டியில் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் போட்டி 47 ஓவர்களாகக்குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய மகளிர் அணி, இப்போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

இந்திய அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மிதாலி ராஜ் (கே), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, தானியா பாட்டியா,பூனம் யாதவ்.

இங்கிலாந்து அணி- லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹீத்தர் நைட் (கே), நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டாங்க்லி, சாரா கிளென், கேத்ரின் பிரண்ட், அன்யா ஷ்ரூப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை