EN-W vs IN-W 4th T20I: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டேனியல் வைட் ஹாட்ஜ் 5 ரன்களிலும், சோஃபியா டங்க்லி 22 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டாமி பியூமண்ட் - அலிஸ் கேப்ஸி இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பியூமண்ட் 20 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி 18 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஏமி ஜோன்ஸ் 9 ரன்களுக்கும், சார்லி டீன் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இறுதியில் இங்கிலாந்து மகளிர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் ஸ்ரீ சாரணி மற்றும் ராதா யாதவ் இணை தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் எளியா இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஷஃபாலி வர்மா 31 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் பெவிலியன் திரும்பினார். 

Also Read: LIVE Cricket Score

அவரைத்தொடர்ந்து 32 ரன்களில் ஸ்மிருதி மந்தனாவும், 26 ரன்களில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும், 2 ரன்னில் அமஞ்சோத் கவுரும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News