வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று முதல் தொடங்கியது. அதன்படி இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டெர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 

Advertisement

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பியூமண்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தையும், ஏமி ஜோன்ஸ் தனது முதல் சதத்தையும் பூர்த்தி செய்து மிரட்டினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 107 ரன்களில் டாமி பியூமண்டு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய எம்மா லம்பும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 122 ரன்களை எடுத்திருண்ட ஏமி ஜோன்ஸும், 9 ரன்களில் சோபியா டங்க்லியும் என ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஜோடி சேர்ந்த கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அலிஸ் கேப்ஸி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் நாட் ஸ்கைவர் பிரண்டு அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களில் விக்கெட்டை இழக்க, அலிஸ் கேப்ஸியும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் அஃபி ஃபிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட  ஹீலி மேத்யூஸ் 48 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய கியான ஜோசப் 62 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய ஸைதா ஜேம்ஸ், ஷெமைன் காம்பெல், சபிகா கஜ்னபி, மாண்டி மங்ரு உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய அலிய அலீன் மற்றும் ஜஹ்சாரா கிளாக்ஸ்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கிளாக்ஸ்டன் 17 ரன்னிலும், செர்ரி ஃபிரேசர் 3 ரன்னிலும், அஃபி ஃபிளெட்சர் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலியா அலீனும் 44 ரன்களில் ஆட்டாமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லின்ஸி ஸ்மித் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News