ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தல் சதம்; இங்கிலாந்துக்கு 319 டார்கெட்!

Updated: Tue, Jul 22 2025 21:03 IST
Image Source: Google

EN-W vs IN-W, 3rd ODI: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். 

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து ஆணியை பாந்துவீச அழைத்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், பிரதிகா ராவல் 26 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்த நிலையில், ஹர்லீன் தியோல் 45 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு ஜெமிமா 50 ரன்களில் நடையைக் கட்ட, மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், 14 பவுண்டரிகளுடன் 102 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

Also Read: LIVE Cricket Score

இறுதியில் ரிச்சா கோஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை