விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்ட ஃபகர் ஸமான்; வைரலாகும் எக்ஸ் பதிவு!

Updated: Sun, Oct 13 2024 20:27 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியி படுதோல்வியின் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர பேட்டரான பாபர் ஆசாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டிங்கில் சோபிக்க தவறிவரும் நிலையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் முயற்சியாக அணியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஐசிசி டி20 உலகக்கோப்பை, வங்கதேச டெஸ்ட் தொடர், இங்கிலாந்து டெஸ்ட் போட்டி என தொடர்ச்சியாக பாபர் ஆசாம் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளார். 

அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாகவே தற்சமயம் அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்து சக வீரர் ஃபகர் ஸமான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள கருத்தானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “பாபர் ஆசாமை அணியில் இருந்து வெளியேற்றுவது பற்றிய ஆலோசனைகளைக் கேட்பது கவலைக்குரியது.

ஏனெனில் 2020 மற்றும் 2023 க்கு இடையில், விராட் கோலியின் சராசரினாது மூன்று வடிவிலும் என 19.33, 28.21 மற்றும் 26.50ஆகவே இருந்தது. ஆனாலும் இந்திய அணி அவரை அணியில் இருந்து நீக்காமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. எங்களின் முதன்மையான பேட்ஸ்மேனை ஓரங்கட்டுவது பற்றி நாங்கள் பரிசீலித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தான் இதுவரை உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேனை இழக்கும் அபாயமும் ஏற்படலாம். 

Also Read: Funding To Save Test Cricket

எதிர்காலத்தை நினைத்து தற்போதே பீதியடைவதை தவிர்க்க இன்னும் நேரம் உள்ளது; நமது முக்கிய வீரர்களை குறைத்து மதிப்பீடுவதை நிறுத்திவிட்டு, அவர்களை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டும்” என்று பாபர் ஆசாமிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஃபகர் ஸமானின் இந்த எக்ஸ் பதிவானது தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை