ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரது சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வேன், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், கிலென் பிலீப்ஸ், மார்க் சாப்மேன் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபருக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது டி20 உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். 

அந்தவகையில் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த ஃபரூக்கி, இன்றைய நியூசிலாந்து போட்டியிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News