மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்! 

Updated: Thu, Sep 21 2023 22:10 IST
Image Source: Google

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. 

இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 22) பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “நான் பாட் கம்மின்ஸை சந்தித்தேன். அவரும் காயத்திலிருந்து மீண்டு நன்றாக உள்ளார். நான் சுழற்பந்துகளுக்கு எதிராக வலைப்பயிற்சி மேற்கொண்டேன். நான் அதிக அளவில் ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டேன். உடல்நிலை சரியாக ஊசி போட்டுக் கொண்டேன். ஊசி போட்டுக் கொண்ட பிறகு மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன். 

நான் நன்றாக உணர்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக எனது முழு பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாதிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை