நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!

Updated: Sun, Oct 29 2023 12:24 IST
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன்ஸ் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68, பரேசி 41 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹதி ஹாசன், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 230 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்பம் முதலே நெதர்லாந்தின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 42.2 ஓவரில் வெறும் 142 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு லிட்டன் தாஸ், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் போன்ற முக்கிய விரல்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் மீக்ரன் 4 விக்கெட்களை சாய்த்தார். இந்த நிலையில் கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 309 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதாகவே இருந்தது. அதிலிருந்து 2 நாட்கள் ஓய்வுக்குப்பின் உடனடியாக இங்கு பயணித்த நாங்கள் என்னுடைய திட்டங்களில் ஈடுபட்டோம். இப்போட்டியில் 220 ரன்கள் அடித்தால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிகமாக கை கொடுத்தனர். ஆர்யன், காலின், பாஸ் உள்ளிட்ட பவுலர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். அத்துடன் நாங்கள் ஃபீல்டிங்கில் சூப்பராக செயல்பட்டோம்.

இப்போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் அசத்தினோம். தற்போது நெதர்லாந்தில் கிரிக்கெட்டின் சிஸ்டங்கள் முன்னேற தொடங்கியுள்ளது. வெற்றிக்காக நாங்கள் கடினமாக பயிற்சி எடுக்க துவங்கியுள்ளோம். இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது. ஆனால் அடுத்ததாக எங்களுக்கு சில கடினமான போட்டிகள் இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை