ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மேகில் (Stuart MacGill). இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மேகில் அடையாளம் தெரியாத சில நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் ஒருமணி நேரத்திற்கு பிறகு மேகிலுக்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள், அவரை விடுதலை செய்துள்ளனர். 

Advertisement

இதுகுறித்து ஸ்டூவர்ட் மேகில் நியூ சௌத் வேல்ஸ் காவல்நிலையத்தில் புகாரளித்த தன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ஸ்டூவர்ட் கடத்தப்பட்டது தொடர்பாக நியூ சௌத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இக்கடத்தல் சம்பவம் பணப்பறிப்பில் ஈடுபடுவதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிரிக்கெட் வீரரை காரில் கடத்தி சென்று, கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News