சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ரான்கின்!

Updated: Sat, May 22 2021 13:03 IST
Image Source: Google

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் போய்ட் ரான்கின். உலகில் இரு நாடுகளுக்கு விளையாடிய 18 வீரர்களில் இவரும் ஒருவர். 

கடந்த 2003ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரான்கின், இதுவரை அந்த அணிக்காக 153 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அதேசமயம் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் மூலம் இவர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர். 

அதன்பின் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அயர்லாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் 35 வயதாகும் போய்ட் ரான்கின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போதுமே ஒரு கடினமான ஒன்று. ஆனால் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இது என்று நான் நினைக்கிறேன். நான் 2003ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கியதிலிருந்து, இன்று வரை தனது ஒவ்வொரு ஆட்டத்தையும் நேசித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை