தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ஃபாஃப் டூ பிளெசிஸ். இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட், 143 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 16 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். அதன்பின் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது லீக் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 

Advertisement

இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ‘ஃபாஃப் த்ரோக் ஃபையர்’ என்ற சுயசரிதை புத்தக்கத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது டுப்ளசிஸ் கடுமையான விமர்சனத்தை வார்னர் மீது வைத்திருக்கிறார்.

Advertisement

அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிரிக்கெட் உலகிலே பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. அந்தத் தொடரில் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை உப்பு காகிதத்தை வைத்து சேதப்படுத்தினர்.

இதன் காணோளி வெளியான நிலையில், டேவிட் வார்னர், ஸ்மித் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தனது புத்தகத்தில் டூ பிளசிஸ் குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பான கேள்வி குறித்து பதிலளித்த அவர், “ஆஸ்திரேலியா வீரர்கள் அடாவடித்தனமாக எங்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டனர். எங்களை தகாத வார்த்தை பயன்படுத்தி போட்டி முழுவதும் எங்களை திட்டினர். இப்படி நடைபெறும் போது நமக்காக நாம்தான் நின்று போராட வேண்டும். வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை. அவர் ஒரு அடாவடிக்காரர். அவரைப் பற்றி எல்லாம் பேசி என் நேரத்தை நான் செலவழிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News