ஆஸ்திரேலிய ஊடகத்தை கடுமையாக எச்சரித்த தினேஷ் கார்த்திக், ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில், ஆடுகளம் குறித்து கூறப்பட்ட அவதூறுகளை முறியடித்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற 17ஆம் தேதி நடக்க இருக்கிறது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலா மைதானத்தில் இருந்து இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்ட பொழுது, தர்மசாலாவில் கடுமையான குளிர்காலம் என்பதால் அங்கு மைதானத்தில் புற்கள் போதுமான அளவில் வளரவில்லை என்பதால் இந்தூர் மைதானத்துக்கு ஆட்டம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பாக்ஸ் கிரிக்கெட் இணையதள ஊடகம், தர்மசாலா மைதானத்தில் அஸ்வின் பந்து வீச்சு சராசரி 12.50 என்று குறைவாக இருப்பதால்தான் ஆட்டம் இந்தூர் மைதானத்திற்கு மாற்றப்பட்டது என்று அவதூறாக பேசியிருக்கிறது. இதற்கு கடுமையான எதிர்வினையை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆகாஷ் சோப்ரா இருவரும் அளித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “இந்தப் பக்கத்தின் அட்மின் மிகத் தெளிவான கவலைக்குரியவர். இவர்கள் யாரிடமும் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியா அணி உடன்தான் மைண்ட் கேம்களை விளையாடுகிறார்கள் ” என்று கடுமையான முறையில் விமர்சித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது, “சுய அழிவின் தொகுதி 1… இந்தூர் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக தட்டையான ஆடுகளமாக கூட இருக்கலாம். நிறைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடைபெற்றது கிடையாது. இது டெஸ்ட்டை டிரா செய்ய ஆஸ்திரேலியாவுக்கு நல்ல வாய்ப்பு. ஒருவேளை வெல்ல கூட செய்யலாம். ஆனால் அஸ்வின் மீதான இவர்களின் ஆவேசம் மீண்டும் இவர்களுக்கு தோல்வியைத்தான் தரும் ” என்று பதிலடியை கொடுத்துள்ளார்.