தனது ஆல் டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!

Updated: Wed, Aug 21 2024 15:08 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் தனது ஆல் டைம் உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தன்னுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்த அணியை உருவாக்கியுள்ளார். இதன்காரணமாக அவர் தேர்வு செய்த இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

ஆனால் அதேசமயம் கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி கம்பீர் தேர்வு செய்த அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றம் மேத்யூ ஹைடனைத் தேர்வு செய்தார். மேலும் மூன்றாவது வரிசை வீரராக தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தார். 

அதன்பின் நான்காம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவையும், 5ஆம் இடத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ஸையும் தேர்வு செய்த அவர், தனது அணியின் 6ஆம் வரிசை வீரராக பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கையும், 7ஆவது இடத்தில் அப்துல் ரஸாக்கையும் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு அவரது அணியின் சுழற்பந்து வீச்சாளராக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தேர்ந்தெடுத்துள்ளார். 

மேற்கொண்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளிண்டாஃப், தென் ஆப்பிரிக்காவின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஆகியோருக்கும் தனது லெவனில் கம்பீர் இடம் கொடுத்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியின் மூன்று பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்களையும், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளில் இருந்து தலா ஒரு வீரரையும் தேர்வுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

கௌதம் கம்பீர் தேர்வு செய்த ஆல்-டைம் உலக லெவன்: ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ஏபி டி வில்லியர்ஸ், பிரையன் லாரா, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இன்சமாம் உல் ஹக், அப்துல் ரசாக், முத்தையா முரளிதரன், சோயப் அக்தர், மோர்னே மோர்கல், ஆண்ட்ரூ பிளின்டாஃப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை