Guyana Amazon Warriors vs Saint Lucia Kings, Match 29 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் செயின்ட் லூசியா கிங்ஸ்  அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

GAW vs SLK: Match Details

  • மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - செப்டம்பர் 28, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

GAW vs SLK: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

GAW vs SLK: Head-to-Head

  • Total Matches: 21
  • Guyana Amazon Warriors: 13
  • Saint Lucia Kings: 8
  • No Result: 00

GUY vs SLK Match 29: Ground Pitch Report

Advertisement

இந்த மைதானத்தில் இதுவரை 35 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Guyana Amazon Warriors vs Saint Lucia Kings Possible XIs

கயானா அமேசான் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆசாம் கான், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், கீமோ பால், ரொமாரியோ ஷெப்பர்ட், டுவைன் பிரிட்டோரியஸ், மோதி-கன்ஹாய், இம்ரான் தாஹிர் (கே), ஜூனியர் சின்க்ளேர், முகமது அலி

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், ஜான்சன் சார்லஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ், டிம் செய்ஃபெர்ட், டேவிட் வைஸ், ஆரோன் ஜோன்ஸ், சட்ராக் டெஸ்கார்ட், அல்ஸாரி ஜோசப், காரி பியர், நூர் அகமது

GUY vs SLK Match 29: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ஜான்சன் சார்லஸ், டிம் செய்ஃபெர்ட் (கேப்டன்), ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ்: ஷிம்ரோன் ஹெட்மையர், ஃபாஃப் டூ பிளெசிஸ்
  • ஆல்-ரவுண்டர்: டுவைன் பிரிட்டோரியஸ், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள்: குடாகேஷ் மோட்டி, இம்ரான் தாஹிர், நூர் அகமது, அல்ஸாரி ஜோசப்
Advertisement

GUY vs SLK Match 27 Dream11 Prediction, Today Match GUY vs SLK, GUY vs SLK Dream11 Team, Fantasy Cricket Tips, GUY vs SLK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News