டி10 லீக்: அதிரடியில் மிரட்டிய கெயில்; டீம் அபுதாபி அசத்தல் வெற்றி!

Updated: Sat, Nov 20 2021 13:00 IST
Gayle & Stirling Guide Team Abu Dhabi To A 4 Wicket Win Against Bangla Tigers In Abu Dhabi T10 (Image Source: Google)

கிரிக்கெட்டின் மற்றொரு புதுவரவாக டி10 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. 

அந்தவகையில் அபுதாபில் இந்தாண்டிற்கான அபுதாபி டி10 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் டீம் அபுதாபி அணி, பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசியது .

அதன்படி களமிறங்கிய அபுதாபி அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கிறிஸ் கெயில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த கிறிஸ் கெயில் 49 ரன்களைச் சேர்த்தார். 

இதனால் 10 ஓவர்கள் முடிவில் டீம் அபுதாபி அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இமாலய இலக்கை துரத்திய பங்களா டைகர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 

Also Read: T20 World Cup 2021

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் அதிரடியாக விளையாட முடியாததால் 10 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 105 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் டீம் அபுதாபி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை