இதுதான் கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் - ரோஹித் சர்மா!

Updated: Tue, May 28 2024 22:59 IST
Image Source: Google

வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர் சஹால், ஷிவம் தூபே, அக்ஸர் படேல் உள்ளிட்ட வீரர்களும் இடம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைப் பொறுப்பின் போது அணியின் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் அளிப்பது தான் தனது மிகப்பெரிய பொறுப்பு என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் கையாள்வது கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். 

கேப்டன் பதவியின் போது நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நபருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அதனால் அவர்கள் முக்கியமானவர்களாகவும் அணியின் ஒரு பகுதியாகவும் உணர வேண்டும். அவர்கள் ஏதேனும் சிரமத்துடன் உங்களிடம் வரும்போது, நீங்கள் அவர்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்க வேண்டும்.

அணியின் கேப்டனாகவும், வீரராகவும் இரு துறைகளிலும் நான் தயாராக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, மைதானம் மற்றும் எதிரணி குறித்து அறிந்து கொள்வது முக்கியம், அதை நானே செய்து வருகிறேன். மேலும் நான் ஓய்வறையில் இருக்கும் போது கூட இது போன்ற விஷயங்களிலும் நிறைய நேரம் செலவிடுகிறேன். இது வீரர்களுக்கானது அல்ல, எனக்கானது. 

ஏனெனில் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் நான் பதிலுடன் தயாராக இருக்க வேண்டு. ஆட்டத்தில் வீரர்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை மேற்கொள்வதால் டி20 கிரிக்கெட் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது, அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ப என்னை தயார் செய்து, எனது சக வீரர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை