West Indies vs Australia T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களையும், ரோவ்மன் பாவெல், ஷெஃபெர்ட் தலா 28 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 51 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலக்கைத் துரத்தும்போது அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 89 இன்னிங்ஸில் 83 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது.

ஆனால் தற்சமயம் கிளென் மேக்ஸெல் 67 இன்னிங்களில் 84 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 120 டி20 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 11 அரைசதங்கள் என 2754 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 145 சிக்ஸர்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

சேஸிங் செய்யும் போது அதிக T20I சிக்ஸர்கள்

  • 84* - கிளென் மேக்ஸ்வெல் (67 இன்னிங்ஸ்)
  • 83 - பால் ஸ்டிர்லிங் (89 இன்னிங்ஸ்)
  • 77 - ரவிஜா சந்தருவன் (48 இன்னிங்ஸ்)
  • 76 - நிக்கோலஸ் பூரன் (53 இன்னிங்ஸ்)
  • 76 - ஜோஸ் பட்லர் (69 இன்னிங்ஸ்)
  • 74 - ரோஹித் சர்மா (68 இன்னிங்ஸ்)
  • 74 - டேவிட் வார்னர் (68 இன்னிங்ஸ்)
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News