ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 24அவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமானது என்பதால் ஆஸ்திரேலியா துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட முடிவு செய்தது. டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். மார்னஸ் லபுஷாக்னே அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். கடைசி 10 ஓவர்களை நெருங்கிய போது அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார்.

Advertisement

அவர் வந்தது முதலே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடினார். தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார்.   உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.

சில நாட்கள் முன்பு தென் ஆப்பிரிக்கா அணியின் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்த நிலையில், அதை முறியடித்து 40 பந்துகளில் மேக்ஸ்வெல் சதம் அடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தார் மேக்ஸ்வெல்.

அதன்பின்னர் கடைசி ஓவரில் 106 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தைன் மூலம் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 131 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News