சாம்பியன்ஸ் கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்காக சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
300 சர்வதேச சிக்ஸர்கள்
இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தனது 300 சிக்சர்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மற்றும் 13ஆவது வீரர் எனும் பெருமையை பெருவார். கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 298 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியளில் அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் 321 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசி வீரர் எனும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 374 ஒருநாள் போட்டிகளில் 159 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக உள்ல நிலையில், கிளென் ஏக்ஸ்வெல் 148 போட்டிகளில் 154 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டியில் 4000 ரன்கள்
இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் 13 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 4000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டும் 19ஆவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். இதுவரை அவர் 148 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34.04 என்ற சராசரியில் 3987 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டான் பிராட்மேன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய அணிக்காக மேக்ஸ்வெல் 271 போட்டிகளில் 255 இன்னிங்ஸ்களில் 6996 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 11 ரன்கள் எடுத்தால், ஆஸ்திரேலியாவுக்காக அதிக சர்வதேச ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். முன்னதாக டான் பிராட்மேன் 52 போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் 6996 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் சாதனை சிறப்பாக உள்ளது. அவர் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34.92 சராசரியுடன் 943 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 6 அரை சதங்கள் அடங்கும்.