EN-W vs IN-W, 3rd ODI: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்திருந்தது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பாந்துவீச அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் 26 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் 45 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்த நிலையில், ஹர்லீன் தியோல் 45 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்ப, சதமடித்து அசத்திய ஹர்மன்ப்ரீத் கவுரும் 102 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரிச்சா கோஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி இங்கிலாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் டாமி பியூமண்ட் 2 ரன்னிலும், ஏமி ஜோன்ஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த எம்மா லம்ப் மற்றும் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 68 ரன்களைச் சேர்த்த கையோடு எம்மா லாம்ப் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து சதத்தை நெருங்கிய நாட் ஸ்கைவர் பிரண்டும் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அலிஸ் டேவிட்சன் 44 ரன்களையும், சோஃபியா டாங்க்லி 34 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: LIVE Cricket Score
Advertisement

இதன் மூலம் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News