ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

Advertisement

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஃபினிஷர் ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தார். 

இதில் சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 97 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையிலும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதேசமயம் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையும் படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா தலா 18 முறை டக் அவுட்டானதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது கிளென் மேக்ஸ்வெல் 19ஆவது முறையாக டக் அவுட்டாகி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்

  • 18 - கிளென் மேக்ஸ்வெல் (130 இன்னிங்ஸ்)
  • 18 - ரோஹித் சர்மா (253 இன்னிங்ஸ்)
  • 18 - தினேஷ் கார்த்திக் (234 இன்னிங்ஸ்)
  • 16 - பியூஷ் சாவ்லா (92 இன்னிங்ஸ்)
  • 16 - சுனில் நரைன் (111 இன்னிங்ஸ்)
  • 15 - மன்தீப் சிங் (98 இன்னிங்ஸ்)
  • 15 - ரஷீத் கான் (60 இன்னிங்ஸ்)

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர்(c), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷேட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பேக்ட் பிளேயர்: நேஹல் வதேரா, பிரவீன் துபே, வைஷாக் விஜய்குமார், ஹர்ப்ரீத் பிரார், விஷ்ணு வினோத்

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இம்பேக்ட் பிளேயர் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News