நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கிளென் பிலீப்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய கிளென் பிலீப்ஸின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலீப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை துரத்திவரும் நியூசிலாந்து அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா 59 ரன்களையும், டேரில் மிட்செல் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி நாளை இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் பேட்டிங்கில் 71 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார்.

அதேபோல் நியூசிலாந்து மண்ணில் கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் கிளென் பிலீப்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளென் பிலீப்ஸ் 2 அரைசதங்களுடன் 276 ரன்களையு, பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News