டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 1இல் நியூசிலாந்து அணியும், குரூப் 2இல் இந்திய அணியும் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்று சிட்னியில் நியூசிலாந்தும் இலங்கையும் மோதிய போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. டேரைல் மிட்செலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Advertisement

நியூசிலாந்து அணி மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது களத்திற்கு வந்த கிளென் பிலீப்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். நியூசிலாந்து அணியை தனி ஒருவனாக கரைசேர்த்த கிளென் பிலீப்ஸ் 64 பந்தில் 104 ரன்களை குவித்தார்.  அவரது சதத்தால் 20 ஓவரில் 167 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, இலங்கையை 102 ரன்களுக்கு சுருட்டி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்த போட்டியில் 4ஆம் வரிசையில் இறங்கி சதமடித்த கிளென் பிலீப்ஸ், டி20 உலக கோப்பையில் 4ஆம் வரிசை அல்லது அதற்கு கீழிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிளென் பிலீப்ஸ்.  மேலும், 2021ம் ஆண்டிலிருந்து டி20 கிரிக்கெட்டில் 149 சிக்ஸர்களை விளாசியுள்ள கிளென் பிலீப்ஸ், லியாம் லிவிங்ஸ்டனுக்கு (152 சிக்ஸர்கள்) அடுத்த இடத்தில் உள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News