Gujarat Titans vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொஅட்ரில் இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்த பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

GT vs MI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் -  நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - மார்ச் 29, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

GT vs MI Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் ஒன்பதாவது போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 4 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 160 ரன்களாக உள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரிலும் இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

GT vs MI: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

GT vs MI Head To Head Record

  • மொத்தம் - 05
  • குஜராத் டைட்டன்ஸ் - 03
  • மும்பை இந்தியன்ஸ் – 02

GT vs MI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், திலக் வர்மா, சாய் சுதர்சன் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்டியா (கேப்டன்), வில் ஜாக்ஸ்
  • பந்து வீச்சாளர்கள் - தீபக் சாஹர், ரஷீத் கான்.
Advertisement

Gujarat Titans vs Mumbai Indians Probable Playing XI

Gujarat Titans Probable Playing XI : சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இம்பாக்ட் வீரர் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்.

Advertisement

Mumbai Indians Probable Playing XI: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்யநாராயண் ராஜு.

இம்பாக்ட் வீரர் - விக்னேஷ் புதூர்.

GT vs MI Dream11 Prediction, GT vs MI, GT vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, GT vs MI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Gujarat Titans vs Mumbai Indians

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News