நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும், டாம் பிளெண்டல் 7 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் பிளண்டெல் 16 ரன்னிலும், வில்லியம் ஓ ரூக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கிளென் பிலீப்ஸ் 16, நாதன் ஸ்மித் 14 ரன்கள் என அடுத்தடுத்து ஆடமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கிசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்தின் நாதன் ஸ்மித், மேட் ஹென்றி மற்றும் டிம் சௌதீ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 15ஆவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதுதவிர்த்து 2021ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேற்கொண்டு 2017ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளர். கடந்த 2017ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்தின் மோயீன் அலி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News