Guyana Amazon Warriors vs Saint Lucia Kings Qualifier 1, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. 

Advertisement

அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய 10 போட்டிகளில் தலா 7 வெற்றி மற்றும் 3 தோல்விகளை மட்டுமே சந்தித்து அசத்தியது. இதில் ரன் ரேட் அடிப்படையில் கயானா அணி முதலிடத்தையும், செயின்ட் லூசியா அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

GUY vs SLK Qualifier 1: Match Details

  • மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - அக்டோபர் 3, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

GUY vs SLK Qualifier 1: Ground Pitch Report

இந்த மைதானத்தில் இதுவரை 36 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 15 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

GUY vs SLK Qualifier 1: Head-to-Head 

  • Total Matches: 21
  • Guyana Amazon Warriors: 13
  • Saint Lucia Kings: 8
  • No Result: 00
Advertisement

GUY vs SLK Qualifier 1: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Guyana Amazon Warriors vs Saint Lucia Kings Possible XIs

Advertisement

கயானா அமேசன் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், கெவ்லான் ஆண்டர்சன், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், மொயீன் அலி, ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், மோதி-கன்ஹாய், ஷமர் ஜோசப், இம்ரான் தாஹிர் (கே)

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ஜான்சன் சார்லஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ், ஆரோன் ஜோன்ஸ், டிம் செய்ஃபெர்ட், டேவிட் வைஸ், சட்ராக் டெஸ்கார்ட்ஸ், அல்ஸாரி ஜோசப், நூர் அகமது, காரி பியர்

GUY vs SLK Qualifier 1: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், ரஹ்மனுல்லா குர்பாஸ், ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ்: ஃபாஃப் டூ பிளெசிச், ஷிம்ரான் ஹெட்மையர்
  • ஆல்-ரவுண்டர்கள்: டேவிட் வைஸ், மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள்: நூர் அஹ்மத், குடகேஷ் மோட்டி, இம்ரான் தாஹிர், ஆல்ஸாரி ஜோசப்
Advertisement

GUY vs SLK Qualifier 1 Dream11 Prediction, Today Match GUY vs SLK , GUY vs SLK Dream11 Team, Fantasy Cricket Tips, GUY vs SLK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News