ஹர்பஜனுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த டிராவிட், கோலி!

Updated: Sat, Dec 25 2021 11:37 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு விடைத்தரும் வகையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அக்காணொளியில் பேசிய டிராவிட், “ஹர்பஜன் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து போராடி முன்னேறி வந்திருக்கிறார்.  2001ஆம் ஆண்டு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது சற்றும் தளராமல் தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பினார். 

 

அதே போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் எடுத்துள்ள 711 விக்கெட்டுகள் சாதாரண விஷயம் அல்ல” என டிராவிட் பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை