இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில், முதல் போட்டியில் இந்திய அணி கடைசிவரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டி புனேவில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் பதும் நிஷங்கா 33, குஷல் மெண்டிஸ் 53, அசலங்கா 37, ஷனகா 56 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இலங்கை அணி 20 ஓவர்களில் 206/6 ரன்களை குவித்தது. அர்ஷ்தீப் சிங் 5 நோ-பால்களை வீசி சொதப்பினார். அதேபோல் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் இருவரும் தலா ஒரு நோ-பால்களை வீசினார்கள். இதனால்தான், இலங்கை அணியால் 200+ ரன்களை அடிக்க முடிந்தது.

Advertisement

இதையடுத்து, இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 2, ஷுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, ஹார்திக் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 ஆகியோர் படுமோசமாக சொதப்பி நடையைக் கட்டினார்கள். அடுத்து சூர்யகுமார் யாதவ் 51, அக்சர் படேல் 65, ஷிவம் மாவி 26 ஆகியோர் கடைசிவரை வெற்றிக்காக போராடியும், இந்திய அணி 20 ஓவர்களில் 190/8 ரன்களை மட்டும் சேர்த்தது.

இதன்மூலம், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோற்றது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. கடைசிப் போட்டி நாளை நடைபெறும்.

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ஹார்திக் பாண்டியா, “பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் பவர் பிளேவை சரியாக பயன்படுத்தவில்லை. அடிப்படை தவறுகளைத்தான் செய்தோம். சர்வதேச அளவிலான போட்டிகளில் அடிப்படை தவறை செய்யக் கூடாது. 

இன்று உங்களுக்கான நாளாக இல்லையென்றாலும், அடிப்படை விஷயத்திலாவது சரியாக செயல்பட வேண்டும். இப்போட்டியில் மட்டுமல்ல, இதற்குமுன்பும் அர்ஷ்தீப் சிங் சில போட்டிகளில் நோ-பால்களை வீசியிருக்கிறார்.நோ-பால்களை வீசுவது தவறல்ல, குற்றம். இனியும் இதேபோல் செய்யக் கூடாது. இத்தவறு தெரிந்தே நடப்பதுதான். தெரியாமல் நடந்தது எனக் கூறவே முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News