டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

Advertisement

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2ஆவது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3ஆவது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.

Advertisement

அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார்.

அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். 2ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி உள்ளார். 

3ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8ஆவது இடத்தில் உள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News