இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியானது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய மகளிர் அணியானது, நேபாள் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு இடம் முன்னேற்றி 11ஆம் இடத்திற்கும், ஷஃபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

Advertisement

மேற்கொண்டு ரிச்சா கோஷ் 4 இடங்கள் முன்னேறி 24ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனீ மற்றும் தஹ்லியா மெக்ராத் இருவரும் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர். மேலும் மூன்றாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸும், நான்காம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும், 5ஆம் இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். 

அதேசமயம் மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனைகள் சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. மூன்றாம் இடத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நீடிக்கிறார். அதேசமயம் இலங்கை வீராங்கனை பிரியதர்ஷினி 3 இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோம் இந்திய வீராங்கனை ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் பூஜா வஸ்திரேகர் 22ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கொண்டு ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். மேற்கொண்டு நான்காம் இடத்தில் நியூசிலாந்தின் அமிலியா கெரும், 5ஆம் இடத்தில் சமாரி அத்தபத்துவும் நீடித்து வருவவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News