இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஹாரி புரூக்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் சதமடித்து அசத்தியதுடன், 171 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களையும், ஒல்லி போப் 77 ரன்களையும் சேர்த்தனர், இதன்மூலம் இங்கிலாந்து அணி 499 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் 151 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டம் லேதம், டெவான் கான்வே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர்.
பின்னர் களமிறங்கிய் கேன் வில்லியம்சன் 61 ரன்களிலும், அடுத்து வந்த பிளெண்டல், கிளென் பிலீப்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டி இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. டேரில் மிட்செல் 31 ரன்களுடனும், நாதன் ஸ்மித் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இப்போட்டியில் 171 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த ஹாரி புரூக் புதிய சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி 26 வயதிற்குள் இங்கிலாந்துக்காக 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் அதிக முறை சேர்த்த வீரர்கள் அடிப்படையில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அந்தவகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாரி புரூக் விளாசும் 4ஆவது 150+ ஸ்கோர் இதுவாகும்.
இந்த பட்டியலில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 5 முறை 150+ ஸ்கோரை குவித்து முதலிடத்தில் நீடிக்கிறர். இந்த பட்டிய்லில் இங்கிலாந்து அணியின் முன்னள் ஜம்பவான்கள் அலெய்ஸ்டர் குக், வலி ஹம்மண்ட் மற்றும் லியோனார்ட் ஹட்டன் ஆகியோர் தலா மூன்று முறை 150+ ஸ்கோரை அடித்து இந்த பட்டியளின் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணிக்காக 26 வயதிற்குள் டெஸ்டில் அதிக 150+ ஸ்கோரை பதிவு செய்த வீரர்கள்
- 5 - ஜோ ரூட்
- 4* - ஹாரி புரூக்
- 3 - அலஸ்டர் குக்
- 3 - வாலி ஹம்மண்ட்
- 3 - லியோனார்ட் ஹட்டன்