நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (நவம்பர் 13) தம்புளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணியின் நட்சத்திர் அசுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா தொடைபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Advertisement

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடரில் இருந்து விலகிய வநிந்து ஹசரங்காவிற்கு பதிலாக மாற்று வீரராக துஷன் ஹெம்ந்தா இலங்கை ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய லோக்கி ஃபெர்குசன், தனது இரண்டாவது ஓவரை வீசி முடித்த நிலையில் காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். இதனால் இப்போட்டியில் அவர் மேற்கொண்டு பந்துவீச முடியாமல் பெவிலியன் இருந்த அவர், மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை. 

இதனையாடுத்து ஃபெர்குசனிற்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்தது தெரியவந்தது. இதன் காரணமாக இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து ஃபெர்குசன் விலகியயதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்ததது. அதேசமயம் இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசனுக்கு மாற்றாக ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லாலகே, மஹீஸ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, அசித்த ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்க, முகம்து ஷிராஸ், துஷன் ஹெமந்தா.

Advertisement

நியூசிலாந்து அணி: மிட்செல் சான்ட்னர் (கே), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங், ஆடம் மில்னே.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News