ICC Womens T20I Rankings: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டன் ஹீலில் மேத்யூஸ் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்திருந்தன.

Advertisement

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் இந்த போட்டியின் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஹீலி மேத்யூஸ் 770 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் முதலிடத்தில் உள்ள பெத் மூனிக்கும் மேத்யூஸுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 24 புள்ளிகளாக மட்டுமே உள்ளது. இதனால் கூடிய விரையில் மேத்யூஸ் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்று கூறப்படுகிறது.

இதுதவிர்த்து இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 2 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தையும், நதின் டி கிளார்க் 3 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தையும். அன்னேரி டெர்க்சன் 8 இடங்கள் முன்னேறி 79ஆவது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் சினெல்லே ஹென்றி 3 இடங்கள் முன்னேறி 86ஆவது இடத்திற்கும், ஜானிலியா கிளாஸ்கோ 140 இடங்கள் முன்னேறி 96ஆவது இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளனர்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

அதேசமயம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதலிடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் நோகுலுலேகோ மிலாபா 6 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் அஃபி ஃபிளெட்சர் 3 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News