பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா

Updated: Fri, Jun 03 2022 15:00 IST
“He Has Made People Run Away By Scaring And Threatening Them” – Aakash Chopra (Image Source: Google)

நடப்பாண்டு ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட் உலகை தனது பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். உம்ரான் மாலிக் பந்துவீச்சு வேகம், துல்லியம் ஆகியவை எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாகஇருந்தது.

நடந்த முடிந்த ஐபிஎல் டி20 தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், 4ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால், பந்துவீச்சில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தாலும், மணிக்கு 150 கி.மீ வேகத்தில்வீசும் அவரின் பந்துவீச்சைப் பார்த்து எதிரணி பந்துவீச்சாளர்கள் மிரண்டது உண்மைதான்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது யூடிப்பில், “ ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர்களில் எத்தனை பேர் இந்திய அணிக்குள் செல்லக்கூடிய வாய்ப்பு பெற்றவர்கள்” என்று கணித்து காணொளியை வெளியிட்டார். அதில் அவர் முதலாவதாக உம்ரான் மாலிக்கைத்தான் குறிப்பிட்டுள்ளார். 

அதில் பேசிய அவர், “இந்திய அணியில் இடம் பெறுவதற்கு அதிக வாயப்புள்ள முதல் வீரர்  உம்ரான் மாலிக்தான். இவரின் பெயர் எப்படியாகினும் வந்துவிடும். ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ், என்ன அருமையாகப் பந்துவீசுகிறார் உம்ரான் மாலிக். மாலிக் பந்துவீச்சில் வேகமும், துல்லியமும் கலந்திருப்பது சிறப்பாகும். உம்ரான் மாலிக் பந்துவீச வரும்போது, பல பேட்ஸ்மேன்கள் பயந்து ஓடியுள்ளா்கள், பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியுள்ளார் உம்ரான் மாலிக்.

உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அதிகமான ரன்கள் செல்கிறது கவலைப்பட வேண்டிய விஷயம். அதனால்தான் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 4 ஓவர்களையும் உம்ரான் மாலிக்கிற்கு தருவதில்லை. எப்போதெல்லம் சிறப்பாகப் பந்துவீசுகிறாரோ அப்போது மட்டும் முழுமையான ஓவர்களை வழங்குவார். அதைச் சரியாகப் பயன்படுத்தி, 3 விக்கெட் சில நேரங்களில் 5 விக்கெட்டுகளைக் கூட வீழ்த்தியுள்ளார். ஆனால், ரன்கள் விட்டுக்கொடுத்தார் அணையை திறந்தால் தண்ணீர் கொட்டுவதைப் போல் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிவிடுவார் உ்ம்ரான் மாலிக்.

ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சு எக்கானி ரேட் 9.03 இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாலிக் இருக்கிறார். 

அனைவருமே உம்ரான் மாலிக் பந்துவீசும் வேகத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். வேகப்பந்துவீச்சாளராக இருக்கட்டும், அல்லது சுழற்பந்துவீச்சாளராக இருக்கும், நான் என்ன விரும்புகிறேன் என்றால், அவர் பந்துவீசத் தொடங்கியபோது, ஆடுகளத்தில் அனைத்து இடங்களிலும் பந்தை பிட்ச் செய்வார். தேனீக்கள் பரப்பதுபோல் அனைத்துப்பகுதிகளிலும் பந்து செல்லும். 

உம்ரான் மாலிக்கின் கற்றுக்கொள்ளும் திறனால் அவருக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணி எவ்வாறு உம்ரான் மாலிக் திறமையை பயன்படுத்தப் போகிறது என்பதில்தான் இருக்கிறது. உம்ரான் மாலிக்கை நன்றாக கவனித்து, கவனமாகப் பயிற்சி அளிப்பது அவசியம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை