யார் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்? - ஹர்பஜன் சிங் கருத்து!

Updated: Mon, Feb 06 2023 15:59 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் இந்நேரம் முடிவு செய்யப்பட்டிருக்கும். ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. கேஎல் ராகுல் டெஸ்ட் அணியின் ரெகுலர் ஓபனர். 

ஆனால் ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும், டி20யில் சதமும் அடித்து சாதனை படைத்தார். 

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், “தொடக்க ஜோடி தான் மிக முக்கியம். ஒரு தொடரின் போக்கை தீர்மானிப்பதே தொடக்க வீரர்கள் தான். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும். ஷுப்மன் கில் வேற லெவல் ஃபார்மில் உள்ளார். கேஎல் ராகுலும் டாப் பிளேயர் தான். 

ஆனால் கில் இப்போதிருக்கும் ஃபார்மிற்கு அவர் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். அண்மைக்காலத்தில் நிறைய ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை