இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கும் என்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்.

Advertisement

ஆனால் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வினால் மட்டும் சக வீரர்களுடன் பயணிக்க முடியவில்லை. அஸ்வினுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக குவாரண்டைன் செய்யப்பட்டார். நெகட்டிவ் என முடிவு வந்தால் தான் பயணம் செய்ய முடியும் என்பதால், அஸ்வின் இங்கிலாந்து டெஸ்டில் இருப்பாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் அஸ்வினின் உடல்நலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், அஸ்வின் தனது குவாரண்டைனை முழுவதுமாக முடித்துவிட்டார். அவரின் உடல்நலம் நன்றாக உள்ளது. அவர் வரும் ஜூலை 23 - 24ஆம் தேதிக்குள் இங்கிலாந்து சென்றுவிடுவார். இதற்கான கடைசி கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அஸ்வின் அணியில் இணைவது மகிழ்ச்சி செய்தி என்ற போதும், மற்றொரு பின்னடைவு உள்ளது. அதாவது இந்திய அணி வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இங்கிலாந்து களத்தை நன்கு புரிந்துக்கொள்ள முடியும். ஆனால் அஸ்வினால் இதில் பங்கேற்க முடியாது என்பதால் ப்ளேயிங் 11இல் இடம்பெறுவாரா என்பதும் சந்தேகம் தான்.

அஸ்வினுக்கு மாற்று வீரரையும் இந்திய அணி ஏற்கனவே தயார் செய்துவிட்டது. அவரின் இடத்திற்கு ஜெயந்த் யாதவை உறுதி செய்த ராகுல் டிராவிட், வரும் பயிற்சி போட்டியிலும் யாதவையே களமிறக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News