பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகும் டிராவி ஹெட்!
பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அந்த அணியில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இளம் வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கனொளி ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா, ஆரோன் ஹார்டி உள்ளிட்டோரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து நடைபெறும் டி20 தொடாருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் டிராவிஸ் ஹெட் விளையாடமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி, டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் விளையாடி வருவதன் காரணமாக அவரது பணிச்சுமையை குறைக்கும் முயற்சியை எடுத்துள்ளோம்.
மேற்கொண்டு அவர் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தொடர்ந்து, டி20 தொடரிலும் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் டிராவிஸ் ஹெட் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கொனொலி, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.