டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!

Updated: Mon, May 12 2025 15:59 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாஅக இன்று அறிவித்து, பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிறப்புவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவற்றுள் சில..,

விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தலைமை பாயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பதிவில், “சிங்கத்தைப் போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன்! உங்களை மிஸ் செய்வோம் விராட் கோலி” என்று பதிவிவிட்டுள்ளர்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதிவில், “நீங்கள் இந்த முடிவை எடுத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நீங்க ஒரு நவீன கால ஜாம்பவான், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீங்க விளையாடிய விதத்திலும், கேப்டனாக இருந்த விதத்திலும் ஒரு அருமையான தூதரா இருந்துள்ளீர்கள். எல்லாருக்கும், குறிப்பாக எனக்கும் நீங்க கொடுத்த நீடித்த நினைவுகளுக்கு நன்றி. இது நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் ஒன்று. கடவும் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்குள் இருக்கும் போராளியை வெளிக்கொணர்ந்தது, அதற்கு நீங்கள் அனைத்தையும் கொடுத்தீர்கள்! நீங்கள் சிறந்த வீரர்கள் விளையாடும் விதத்தில், உங்கள் இதயத்தில் பசியுடன், உங்கள் வயிற்றில் நெருப்புடன், ஒவ்வொரு அடியிலும் பெருமையுடன் விளையாடியுள்ளீர்கள். நீங்கள் செய்ததை நினைத்தும் அனைவரும் பெருமைப்படுகிறீர்கள். வாழ்த்துகள் கிங் கோலி” என்று பதிவிட்டுள்ளார். 

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது எக்ஸ் பதிவில், "உங்கள் கேப்டன்சியில் எனது டெஸ்ட் அறிமுகத்திலிருந்து நம் நாட்டிற்காக புதிய உயரங்களை எட்டுவது வரை, உங்கள் ஆர்வமும் ஆற்றலை மிஸ் செய்கிறேன். ஆனால் நீங்கள் விட்டுச் சென்ற மரபு ஒப்பிடமுடியாதது. டெஸ்ட் கிரிக்கெட் அணியில் உங்களின் ஒரு குறிப்பிடத்தக்க பயணத்திற்கு என்னுடையா வாழ்த்துக்கள்” என்று பதிவுசெய்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது எக்ஸ் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்கள் ஆர்வமும் தலைமைத்துவமும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது, சகோதரரே! விராட் கோலிக்கு எனது அன்பும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  நீங்கள் விலகிச் செல்வதைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது, ஆனால் உங்கள் மரபு நிலைத்திருக்கும்” என்று பதிவுசெய்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே தனது எக்ஸ் பதிவில், “உங்களுடைய சிறந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் விராட் கோலி.  உங்கள் ஆற்றல், நம்பிக்கை மற்றும் பெருமை அணியை உயர்த்தியது. நீங்கள் விளையாட்டின் உண்மையான தூதராக இருந்திருக்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து உலகெங்கிலும் உள்ள முன்னாள், இந்நாள் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐபிஎல் அணிகள் என பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை