இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Sep 14 2024 09:33 IST
Image Source: Google

வாங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணி சென்னை வந்தடைந்து தங்களது பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் வங்கதேச அணியும் விரைவில் சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வங்கதேச அணியானது சமீபத்தில் தான் பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதுடன், இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இதனால் அதே உத்வேகத்துடன் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வங்கதேச அணி கையாளும் என்பதால் இத்தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், இந்திய அணிக்கு வங்கதேச அணியானது தொந்தரவைக் கொடுக்கது என தான் நினைப்பதாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவாலை அளிக்கும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கவில்லை. இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும், பாகிஸ்தானில் வங்கதேசம் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அவர்கள் இந்தியாவை அதிகம் தொந்தரவு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து தினேஷ் கார்த்திக்கின் இந்த கருத்தானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Also Read: Funding To Save Test Cricket

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை