இந்திய அணியின் அடுத்த சச்சின், கோலி யார்? - உத்தாப்பாவின் பதில்!

Updated: Thu, May 18 2023 13:15 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் தற்போது அதிகப்படியான மாற்றங்களை உள்வாங்க வேண்டிய காலத்தில் இருக்கிறது. புதிய வீரர்கள் வந்து பலரின் இடத்தை நிரப்ப இருக்கிறார்கள். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ஜிதேந்தர் சர்மா போன்ற வீரர்கள் மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக வெளிப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த நான்கு மாதம் காலம் கழித்து இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்தியக் கிரிக்கெட்டில் இந்த உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடப்பதால் மட்டுமே முக்கியமானதாக அல்லாமல், இந்தத் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதாலும் மிக முக்கிய தொடராக கருதப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவிடம் சச்சின் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் கிடைத்து விட்டார்களா என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அவர், “சச்சின், விராட் கோலி போல் மாறும் திறமை உள்ளவராக நான் ஷுப்மன் கில்லைப் பார்க்கிறேன். நிச்சயமாக அவருக்கு ஸ்டப் கிடைத்துள்ளது. அவர் விதிவிலக்கான ஃபார்மில் இருக்கும் அற்புதமான வீரர். தற்போது அவர் விதிவிலக்கான கிரிக்கெட்டை விளையாடுகிறார். சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பெரிய விஷயங்கள் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் மொத்தமான மாற்றங்கள் நடக்கும்.

இந்திய அணி உடனான எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு நிச்சயம் அனுபவ வீரர்களுடன்தான் செல்வார்கள். ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக மொத்தமான மாற்றங்களை செய்வது புத்திசாலித்தனமானது அல்ல. மேலும் யாருக்கும் பார்ம் என்பது தற்காலிகமானது. இதைச் சொல்வதின் மூலம் நான் சொல்ல வருவது உலகக்கோப்பை தொடருக்கு பின்பு மொத்தமான மாற்றங்களை இந்திய கிரிக்கெட்டில் பார்க்கலாம். 

ஆனால் நமக்கு காயம் தொடர்பான சில கவலைகள் உள்ளன. தற்பொழுது பும்ரா காயத்தால் கிடைக்கவில்லை. அவர் உலக கோப்பைக்கு முன்பு தயாராகி வருவார் என்று நம்புவோம். அடுத்து கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரது இடமும் கவலைக்குரிய ஒரு விஷயம். நாங்கள் தகுதியான ஒரு அணியை வெளிப்படுத்தி உலகக் கோப்பையை வெல்ல சிறந்த வாய்ப்பை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை